இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் முகமது சமி ஆகியோர் இணையதள பக்கத்தில் பேசி கொண்டனர். அப்போது முகமது சமி மனம் திறந்து தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவித விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்கிறது. இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களை சந்தித்து அவர்களை மகிழ்வித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் முகமது சமி ஆகியோர் இணையதள பக்கத்தில் பேசி கொண்டனர். அப்போது முகமது சமி மனம் திறந்து தனது வாழ்வில் ஏற்பட்ட சில கசப்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் காயமடைந்து வீட்டில் 18 மாதங்கள் முடங்கி இருந்தேன். அதன்பிறகு, மீண்டும் அணியில் சேர்ந்து விளையாடிய போது குடும்ப பிரச்சனைகள், மனைவி தன் மீது கொடுத்த வன்முறை, பல பெண்களுடனான தொடர்பு போன்ற புகார்கள், மேட்ச் பிக்சிங் புகார் காரணமாக பிசிசிஐ தன் மீதான ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது போன்ற பிரச்சனைகள் பல எழுந்தன.
அந்த சமயம் 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். இழந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னுடன் தன் குடும்பம் உறுதுணையாக இருந்தது. அதனால் தான் அந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு விளையாட ஆரம்பித்ததாக தனது வாழ்வில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளை ரோஹித் சர்மாவுடன் இணையத்தில் பகிர்ந்து கொண்டார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…