தோனிக்கு காயமா? ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனி காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நடந்த போட்டியில் தன்னந்தனி ஆளாக நின்று கடைசிவரை போராடினார்.
இந்த போட்டியின் போது அவ்வப்போது அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவருக்கு முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று தெரிகிறது.
இது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கூறியதாவது…
அவருக்கு சென்னை அணி என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தற்போது ஓய்வு எடுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். உலக கோப்பை தொடரில் அவர் கண்டிப்பாக ஆடுவார் என்று கூறியுள்ளார் மைக் ஹசி.