தோல்விக்கு காரணம் இதுதான்: ஓப்பனாக கூறிய தல தோனி

Published by
Srimahath
  • அதன் பின்னர் சில கேட்சுகள் விடப்பட்டது,  சில மிS-பீல்டிங் ஏற்பட்டது.
  • கடைசி சில ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.

மும்பை  மற்றும் சென்னை இடையேயான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. இதன்படி முதல் ஆட்டத்தில் முதல் 18 ஓவர்கள் வரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது சென்னை அணி. ஆனால் கடைசி 2 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் .இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 170 ரன் விளாசிய.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியால் துவக்கம் முதலே சரியாக ஆட முடியவில்லை. சென்னை அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்களிலும் தோனி 12 ரன்களிலும் வெளியேறினர்.

கேதர் ஜாதவ் மட்டும் நிலைத்து நின்று 54 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். ஆனால் மும்பையின் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் . பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் இரண்டிலும் ஒற்றை ஆளாக சென்னை அணியை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி கூறியதாவது..

ஒரு சில காரணங்கள் எங்களுக்கு எதிராக சென்றுவிட்டது. முதல் 10 ஓவர்கள் ஆட்டத்தை கையில் வைத்திருந்தோம். அதன் பின்னர் சில கேட்சுகள் விடப்பட்டது,  சில மிச்-பீல்டிங் ஏற்பட்டது. கடைசி சில ஓவர்களில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. இதுவே எங்களுக்கு தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. பல வீரர்கள் காயத்தில் உள்ளனர் என்று பேசினார் தோனி.

Published by
Srimahath

Recent Posts

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

2 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

3 hours ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

12 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

14 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

15 hours ago