ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து எம்.எஸ்.தோனி படைத்த புதிய சாதனை..!

2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் எட்டாவது போட்டி நேற்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் இத்துடன் 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவர்கள் 350க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதாவது இவர் இதுவரை 372 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவருக்கு அடுத்ததாக அதிக அளவில் டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் எனும் பெருமை எம்எஸ் தோனி அவர்களுக்கு சென்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025