தோல்வி அடைந்த சென்னை ! தோனியின் மகளுக்கு மிரட்டல்

Default Image

தோனியின்  மகளான ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆனால் போட்டி இந்தியாவில் நடைபெறாமல் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்காக தடுமாறி வருகிறது.சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மொத்தம் 6 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றிகள் ,4 தோல்விகள் அடங்கும்.முதல் போட்டியில் மும்பை அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.5-வது போட்டியில் பஞ்சாப் அணியுடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.2 வது போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ,3-வது போட்டியில் டெல்லி அணியுடன் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி,4-வது போட்டியில் 7  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி,6-வது போட்டியில் கொல்கத்தா அணியுடன் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.டெல்லி அணியுடன் விளையாடிய போட்டியைத் தவிர மற்ற அணிகளுடன் விளையாடிய போட்டிகளில் சென்னை அணி வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வி அடைந்துள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.

இதன் விளைவாக சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் கொல்கத்தா அணியுடன் சென்னை அணி அடைந்த தோல்வியை அடுத்து தோனியின் மனைவி ஷாக்சியின் இன்ஸ்டாகிராமில் அவர்களது 5 வயது மகளான ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் கமெண்ட் செய்யப்பட்டுள்ளது .இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்