உலகோப்பையோடு ஓய்வு பெறுகிறார..?2021 டோனி இல்லாத ஐபிஎல்_லா குறித்து டோனியின் ஓபன் டாக்
ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில் வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது.
இருந்தாலும் விடாமல் சென்னை இழுத்து பிடிக்கவே எல்லோருடைய புருவங்கலும்,விரிய தொடங்கியன இதயம் படபட வெண் அடித்து கொண்டது அந்த கடைசி ஓவரில்,கண்ணை முடிய சென்னை ரசிகருக்கு சற்று ஏமாற்றமே ஆனால் மறுபக்கம் மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது.
சென்னை அணி கேப்டன் டோனி தோல்வி குறித்து தெரிவித்துள்ளார்.அதில் இந்த தோல்வி என்னை மிகவும் காயப்படுத்தியது.ஆனால் சீசனில் சிறப்பாக செயல்பட்டோம்.என்ற போதிலும் இறுதி வரை வந்ததை அப்படியே திரும்பி பார்க்கும் போது சரியாக ஆடி இந்த இடத்திற்கு வரவில்லை என்று தோன்றுகிறது. போட்டியில் எங்களின் மிடில் ஆடர் வரிசை கை கொடுக்கவில்லை
தோல்வி எப்போதுமே காயப்படுத்தும்.இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.இறுதி போட்டி சிறப்பாக இருந்தது.இறுதிப்போட்டியில் பரப்பான ஆட்டத்தை இறுதிவரை இரு அணிகளுமே வெளிப்படுத்தின.ஆட்டத்தில் இரு அணியுமே நிறைய தவறுகள் செய்தன. அதில் குறைந்த தவறு செய்த அணி ஆட்டத்தில் வெற்றி பெற்றது.மேலும் எங்கள் அணியின் பந்து வீச்சு சொல்லும் படியாக இருந்தது.ஆட்டத்திற்கு எது தேவைப்பட்டதோ அதனை அவர்கள் செய்தனர்.
தவறுகள் எந்த இடத்தில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.ஆனால் அதனை பார்க்க இப்பொழுது நேரமில்லை.உலகக்கோப்பையில் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.அதன் பின் ஆராய வேண்டும்.இவ்வாறு டோனி தெரிவித்து கொண்டிருக்கும் பொழுது டெலிவிசன் வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் ஒரு கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்வி :அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா?
இந்த கேள்வி கேட்ட நேரத்தில் டோனி இல்லாத ஐபிஎல்_லா அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று ரசிகர்கள் மனதில் நினைத்து கொண்டி பொழுது தான் டோனி பதில் அளித்தார்.ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று தன்னபிக்கையோடு விடை அளித்து விட்டு தனக்கே உரிய நடையில் சென்றார்.எல்லோருடைய மனதிலும் எழும் எதற்கு இப்போ இந்த கேள்வி என்று காரணம் டோனி உலகக் கோப்பையோடு கிரிக்கெட்டில் ஒய்வு பெறப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஐபிஎலில் பங்கேற்பார என்ற சந்தேகத்திற்கு பங்கேற்று விளையாடுவேன் போட்டியின் தவறுகளை ஆராய்வேன் என்று தெரிவித்துள்ளது.அவருடைய ரசிகருக்கு ஆனந்தமே.