ராணுவ வீரர்களை கௌரவபடுத்த முடிவு ! நிகழ்ச்சியை தயாரிக்கும் தோனி

Default Image
  • நீண்ட நாட்களாக தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் உள்ளார்.
  • ராணுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க தோனி முடிவு செய்துள்ளார்.  

தமிழ் சினிமாவை பொருத்தவரை தல என்ற அது அஜித் .அதேபோல் விளையாட்டு துறையை பொருத்தவரை தல என்றால் அது தோனி மட்டும் தான்.அப்படி தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.இந்தியாவில் நடைபெறும் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒரு போட்டியில் தோனியின் பெயர் ஏதாவது ஒரு போட்டியில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.ஏனென்றால் சமீபத்திய போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை.இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு பிறகு வேறு எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்க வில்லை.இதனால் தோனியின் ரசிகர்கள் சில முக்கிய தொடர்களில் அவர் பங்கேற்காததால் ஏமாற்றத்தில் இருந்தனர்.பின்னர் பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்டில்  கௌரவ லெப்டினன்ட் கர்னலாக இருந்த நிலையில் 2 மாதங்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டார்.அங்கு தோனி பயிற்சி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு புது செய்தி ஓன்று வெளியாகியுள்ளது.

தான் ராணுவத்தில் கௌரவ  பொறுப்பில் உள்ள  நிலையில் அசோக் சக்ரா மற்றும் பரம்வீர் சக்ரா விருதுகளை பெற்றவர்களின் கதைகளை விவரிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் தோனி. அவருடன் இணைந்து ஸ்டூடியோ நெக்ஸ்ட் ( StudioNEXT ) என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான திரைக்கதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்,அடுத்த ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டுக்காக பணியாற்றும் வீரர்களின் பயணத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் தோனி இந்த  முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்