2008 முதல் ஐபிஎல் தொடர் மூலம் தோனி சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா??

Default Image

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் தல தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் 137 கோடி ருபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் தல தோனியும் தான். எந்த ஒரு கடினமான நிலைமையிலும் தந்து கோபத்தை சக வீரர்களிடம் வெளிகாட்டமாட்டார். டெஸ்ட், டி-20, ஒருநாள், உலகக்கோப்பை, ஐபிஎல், என அனைத்து வகையான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டனாவார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிசார்பாக அவர் மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் தல தோனி எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து InsideSport’s MoneyBall என்ற நிர்வாகம் நடத்திய ஆய்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி 2008 ஆம் ஆண்டு முதல் நடந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 137 கோடி ருபாய் சம்பாதித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து இரண்டாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 கோடி ரூபாயும், மூன்றாம் இடத்தில் 126 கோடி ரூபாய் சம்பாதித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்