தோனி ரொம்ப கஷ்டப்பட்டாரு…ஆனா இப்போ? ஒரு நாள் விதிகளால் கடுப்பான மொயீன் அலி!
இப்போது இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் விதிகள் சரியானதாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால் புதிய பந்துகளை பயன்படுத்துவார்கள். ஆனால், இப்போது விதிகளின் படி ஒரு நாள் போட்டிகளில் ஒவ்வொரு இன்னிங்ஸிலும்இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதைப்போல, பவர்ப்பிளே வீதிகளிலும் சில மாற்றங்கள் செய்த காரணத்தால் பேட்டர்களுக்கு அதிக ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
உதாரணமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது இந்த விதிகள் சரியில்லை என பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவது பேட்டர்களுக்கு சுலபமாக ரன்கள் அடிக்க கூடிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு இன்னிங்கிஸிற்கும் புது பந்துகள் பயன்படுத்தபடும்போது பந்து புதிதாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் பந்தை அடித்தவுடன் சிக்ஸர்கள் பவுண்டரிகள் சென்றுவிடும்.
இந்த விதிமுறை காரணமாக, இப்போது விளையாடும் வீரர்கள் கூட சராசரி 50, 60 ரன்கள் வைத்திருக்கிறார்கள். இதுவே நீங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தபோது எடுத்துக்கொண்டீர்கள் என்றால் ஒரு போட்டிக்கு ஒரு பந்து தான் பயன்படுத்துவார்கள். அந்த பந்துகள் 30 ஓவர்கள் வந்துவிட்டது என்றாலே கடினமாகிவிடும். சிக்ஸர், பவுண்டரிகள் அடிப்பது அவ்வளவு எளிதாக இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும்..அந்த கடினமான விளையாட்டிலும் வீரர்கள் சிக்ஸர்கள் பவுண்டரிகள் என விளாசினார்கள்.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், லான்ஸ் குளூஸ்னர் மற்றும் எம்.எஸ். தோனி, கடைசி ஓவர்களில் ஆரம்ப காலத்தில் விளையாடியபோது எவ்வளவு கஷ்டங்களை சந்தித்து விளையாடி இருப்பார்கள். அவர்கள் மென்மையான பழைய பந்துகளை எப்படி எப்படி விளையாடி இருப்பார்கள் என்று நினைத்துப்பார்க்கும்போது எனக்கே மிகவும் கஷ்டமாக தான் இருக்கிறது. இப்போது இரண்டு பந்துகளை பயன்படுத்தலாம் என்ற விதிமுறையை கொண்டு வந்து பந்துவீச்சளர்களுக்கு அழுத்தத்தை உண்டு செய்து அவர்களை சிரமப்பட வைத்திருக்கிறார்கள். இந்த வீதியில் என்னை பொறுத்தவரை எனக்கு உடன்பாடு இல்லை” எனவும் மொயீன் அலி தெரிவித்தார்.
புதிய பவர் பிளே விதி முதல் பவர் பிளே: போட்டியின் முதல் 10 ஓவர்களில், பவுண்டரி லைனுக்கு வெளியே 2 வீரர்கள் மட்டுமே இருக்க முடியும்.
இரண்டாவது பவர் பிளே: 11வது ஓவரிலிருந்து 40வது ஓவர்வரை, பவுண்டரி லைனுக்கு வெளியே 4 வீரர்கள் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
மூன்றாவது பவர் பிளே: 41வது ஓவரிலிருந்து 50வது ஓவர்வரை, பவுண்டரி லைனுக்கு வெளியே 5 வீரர்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.