15 கோடி மோசடி… 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்த எம்எஸ் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்து, 2 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார். 2017ம் ஆண்டு கிரிக்கெட் அகாடமி அமைப்பது குறித்து தோனியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறியதற்காக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மெண்ட் லிமிட்டெடை சேர்ந்த திவாஹர் மற்றும் விஷ்வாஷ் இருவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஆர்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் என்ற அதிகாரிகள் தோனிக்கு ரூ.15 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஷ்வாஷ் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்கு ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை இருவரும் கடைபிடிக்கவில்லை.
டாஸ் முடிஞ்சதுன்னு நினைச்சேன் போட்டியே முடிஞ்சது – கே.எல்.ராகுல் பேச்சு!
ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, உரிமை கட்டணத்தை செலுத்தவும், லாபத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவைகளை நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு முறை நினைவூட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டப்பூர்வ நோட்டீஸ்களும் அனுப்பப்பட்ட நிலையில், அவைகளும் புறக்கணிக்கப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ கடிதத்தை எம்எஸ் தோனி திரும்பப்பெற்றார். இதுகுறித்து அவர்களுக்கு நோட்டீஸ்களை அனுப்பியும் பலனில்லை என்றும் ஒப்பந்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் தங்களுக்கு 15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனி தரப்பில் 2 பேர் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.