தோனியின் புதிய சாதனை.. முதல் இடத்தை பிடிக்க துரத்தும் ஜடேஜா…

MS Dhoni - Jadeja

MS Dhoni : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீராக சென்னை சூப்பர் கிங் அணி வீரர் MS தோனி சாதனை படைத்துள்ளார்.

2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் IPL தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் CSK வீரராகவும் MS தோனி விளையாடி வருகிறார். ஆரம்பம் முதல் CSK அணியின் விக்கெட் கீப்பராகவும் அவர் தொடர்கிறார்.

நேற்று நடைபெற்றது வரையில் 251 போட்டிகளில் விளையாடிய தோனி இதுவரை 42 முறை ஸ்டம்பிங் முறையில் வீரர்களை அவுட் செய்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பிடித்த 2 கேட்சுகளை சேர்த்து மொத்தம் 144 கேட்சுகளை பிடித்துள்ளார். அடுத்ததாக, ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ரன்அவுட் செய்து வீரர்களை ஆட்டமிழக்க செய்த வீரராக தோனி சாதனை படைத்துள்ளார்.

நேற்று பெங்களூரு அணியில் இருந்து சிறப்பாக விளையாடிய அனுஜ் ராவத்தை ரன்அவுட் செய்ததன் மூலம் இதுவரையில் 24 ரன் அவுட்களை நிகழ்த்தியுள்ளார் தோனி. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ரன்அவுட் செய்த வீரர் என்ற பெருமையை MS தோனி பெற்றுள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா 23 ரன்அவுட்களுடன் முதலிடத்தை பிடிக்கும் வரிசையில் உள்ளார். 3ஆம் இடத்தில் பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன் அவுட்களை நிகழ்த்தியுள்ளார். 4ஆம் இடத்தில் மணீஷ் பாண்டே மற்றும் CSK முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 16 ரன்அவுட்களை நிகழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்