இந்தியாவில் 12 வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 8 அணிகள் பங்கேற்று களமிறங்கியது.இந்த அணிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதிலும் இதில் நான்கு அணிகள் மட்டுமே தகுதிப்பெற்றது.
அதில் சன்ரைஸ் ஹைதாரபாத்,டெல்லி கேப்பிட்ல்ஸ்,மும்பை இண்டியன்ஸ் , சென்னை சூப்பர் கிங்க்ஸ் அடங்கும்.
இதில் இறுதிப்போட்டி தகுதிச் சுற்றில் மும்பையுடன் -சென்னை மோதியது அதில் மும்பை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதில் தோல்வியை தழுவிய சென்னை குவாலிபயர் -1 வெற்றி பெற்ற அணியோடு மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே குவாலிபயர் 1 ல் டெல்லி மற்றும் ஹைதராபாத் மோதியது.
இதில் டெல்லி வெற்றி பெற்று ஹைதராபாத்தை வெளியேற்றியதன் முலம் சென்னையோடு மோத ரெடியானது அதே போல இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணி எது ..? என்ற கேள்விக்கான பதிலாக நேற்று நடைபெற்ற போட்டியில் (டெல்லி -சென்னை ) மோதியது அதில் சென்னை வெற்றியை தட்டியது.
இந்நிலைலையில் டெல்லி தலைசிறந்த பேட்டிங்கையை வைத்துள்ளது என்று கிரிக்கெட் வட்டாரத்தில் வட்டமிட்டது.அதற்கு ஏற்ப டெல்லியும் இருந்தது என்று தான் கூறவேண்டும்.அதற்கு செக் வைக்கும் விதமாக சென்னை நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.இதில் சென்னையின் பந்து வீச்சு அனைவராலும் பேசப்பட்டது.இதனை டோனியும் உறுதி படுத்தியுள்ளார்.
அவர் சென்னை அணியின் பந்து வீச்சு பற்றி எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாளர்கள் மேலும் தொடக்கக் வீரர்கள் ஆட்டம் பேசும் படியாக இருந்தது.இதனால் எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் தகுதிப் பெற்று உள்ளது.மேலும் போட்டியில் விக்கெட் எடுப்பது முக்கியமானது அதனை பந்து வீச்சு துறை சிறப்பாக செயல்பப்பட்டது.அவர்களால் தான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தோம்.மேலும் எங்களின் பவுலர்கள் எதிராணியின் ஸ்கோரை மட்டுப்படுத்தினர்.அதுமட்டுமல்லாமல் எங்களின் அணி வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து அபாரமாக செயல்பட்டனர்.இது எங்களின் வழக்கமான வெற்றி வழியாகும்.கடந்த முறை மற்றும் விதிவிலக்கு மேலும் இந்த வெற்றியை பெற்றது மகிழ்ச்சி தான் என்று புகழ்ந்து உள்ளார்.
நாளை மும்பையோடு நடைபெறும் போட்டியில் சென்னை மோத களமிறங்குகிறது. இந்த இரண்டு அணிகளுமே கோப்பையை சுருசித்துள்ளது கவனத்தில் கொள்ள தான் வேண்டும்.இதில் யாரு ஜெய்ப்பா என்ற ரசிகர்களின் கேள்விக்க்கான பதில் நாளை கிடைத்து விடும்.
ரசிகர்களின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும் மேலும் தங்களது கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நீங்களும் கிரிக்கெட் ரசிகராக இருந்தால் (சென்னை -மும்பை ) வெல்லப் போவது யார்..?என்று உங்களின் பொன்னான கருத்தை பதிவிடுங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…