இன்ஸ்டாகிராமில் விராட் கோலிக்கு பிறகு எம்.எஸ்.தோனி..!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய கேப்டனுமான எம்.எஸ்.தோனி, விராட் கோலிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் வைத்திருக்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரராக உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தற்போது எம்.எஸ்.தோனிக்கு 30 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதுவரை தோனி இன்ஸ்டாகிராமில் 108 போஸ்ட் மட்டுமே பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 88.7 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸை கொண்டு முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 27.5 மில்லியன் பாலோவர்ஸ்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.