பட்டியலில் இருந்து தூக்கப்பட்ட தோனியின் பெயர்..!-2020ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஜ…!
- வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை
- 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேபடனும் விக்கெட் கிப்பருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை.இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் 2019 அக்டோபர் முதல் 2020 செப்டமர் வரையிலான இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு அதில் ஏ பிளஸ் கிரேடில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர்கள் இடம்பெற்றுள்ளனர்.மேலும் ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், புஜாரா, கே.எல்.ராகுல், ரஹானே, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஷிகார் தவான், ரிஷப் பந்த் ,இஷாந்த் சர்மா, குல்திப் யாதவ், ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை பிசிசிஐ வெளியிட்ட இந்த பட்டியலால் தோனி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.