மகளுடன் பனிமனித சிற்பம் செய்து விளையாடும் எம்.எஸ்..ரசிக்கும் ரசிகர்கள்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ளார் எம்.எஸ்.தோனி.
- எம்.எஸ்.தோனி தனது மகளுடன் பனிமனித சிற்பம் செய்து உற்சாகமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்.
தோனி என்றலே ரசிகர்களின் ஆரவாரம் அடங்க ஐந்து நிமிடங்கள் ஆகும்.அப்படி ஒரு கிரிக்கெட் தலைவன் எம்.எஸ்.தோனி பணிபிலும் சரி விளையாட்டிலும் சரி அவருக்கு நிகர் அவர் தான் என்று ரசிகர்ளே ரசிக்கின்றனர்.தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் டேராடூனுக்கு சுற்றுலா சென்றுள்ள தோனி நடுங்க வைக்கும் குளிரைத் தாங்கும் வகையிலான இறுக்கமான ஆடை ஒன்றை அணிந்து வந்த தோனி தனது மகளுடன் பனிக்கட்டிகளைக் கொண்டு ஒரு பனிமனித உருவத்தினை செய்து உற்சாகமாக விளையாடினார். இந்த காட்சிகளை தோனியின் மனைவி சாக்சி தனது இன்ஸ்டகிராமில் நேரலை செய்தார் இதனை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பார்த்தனர் மேலும் இந்த வீடியோக்களை பதிவிட்ட தோனி ரசிகர்கள் இதனை சமூகவலைதலங்களில் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.