தோனியின் தண்டனையே தனிப்பா..!ஆப்டனின் ருசிகரம்
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக வலம் வந்தவர் டோனி தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.ஆனால் டோனி என்றுமே அவருடைய ரசிகரின் மனதில் கேப்டனாகவே உள்ளார்.அவருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகரை பெற்ற ஒரே வீரர் ஆவர்.
இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி மூன்று விதமான கோப்பைகளையும் இந்தியாவிற்கு இவர் தலையிலான இந்திய அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி என்றால் கூல்,ரொம்ப அமைதி ஆனவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் கிரிக்கெட் அவர் காரராக இருந்துள்ள ருசிகர தகவல் பற்றி மனநல பயிற்சியாளர் பாடி ஆப்டன் கூறியுள்ளார்.
அதில் அவர் இந்திய அணியை மேம்படுத்தும் வேலையை டெஸ்ட் கேப்டன் அணில் கும்ளே டெஸ்ட் அணியிலும் மேலும் ஒருநாள் கேப்டனாக இருந்த டோனியும் பாடுபட்டனர்.
மேலும் அணியில் வீரர்கள் தாமதமாக வருவதையும் ,குறித்த நேரத்தில் பயிற்சிக்கு வரவும்,நேரத்திற்கு வருவது எவ்வளவு முக்கியம் என்பதை வேண்டும் என்ற நோக்கத்தில் பயிற்சி எடுக்க தாமதமாக வரும் வீரர்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று அணில் கும்ளே பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர் 10,000 அபராதமாக கட்ட வேண்டும் என்று கட்டளை போட்டார்.
ஆனால் டோனி ஒருபடி மேலே போய் பயிற்சி ஆட்டத்திற்கு தாமதமாக வீரர் ஒருவர் வந்தால் அந்த பயற்சி ஆட்டத்தில் உள்ள அனைவருமே 10,000 அபராதமாக கட்ட வேண்டும் என்று காரராக கட்டளை போட்டு விட்டார் என்று டோனி வீரர்களை கையாண்ட விதம் பற்றி கூறினார்.மேலும் டோனியின் அமைதியான குணமே அவரை தகுந்த சூழலுக்கு ஏற்ப செயல்பட வைக்கிறது அவருடைய இந்த முறை முலமே தற்போதுவீரர்களின் பயிற்சி சிறப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்…