அதிக சதங்கள் – பிராட்மேனை முந்தினார் ஸ்டீவ் ஸ்மித்!
தனது 30-ஆவது சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் எடுத்தார் வீரர் ஸ்டீவ்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்து டான் பிராட்மேனை முந்தினார் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித். தனது 30-ஆவது சதத்தை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் எடுத்தார் வீரர் ஸ்டீவ். மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் அடித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங் 41 டெஸ்ட் சதங்களும், ஸ்டீவ் வாக் 32 டெஸ்ட் சதங்களும் அடித்துள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் 30-ஆவது சதத்தை அடித்துள்ளார்.