ஒரே வருடத்தில் சதத்துக்கு மேல் சதம்…அசத்தல் சாதனை படைத்த சுப்மன் கில்.!!
ஒரே ஆண்டில் டெஸ்ட், டி20, ஒருநாள் மற்றும் ஐபிஎல் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
இளம் வீரர் சுப்மன் கில் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் அருமையாக விளையாடி வருகிறார். நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கூட அதிரடியாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். இது தான் அவருக்கு ஐபிஎல் போட்டியில் முதல் சதமும் கூட.
இதன் மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். சுப்மன் கில் 2023-ல் டெஸ்ட் கிரிக்கெட் ,டி20 கிரிக்கெட்டில், ஒரு நாள் கிரிக்கெட், ஐபிஎல் ஆகிய போட்டிகளில் தலா 1 சதம் அடித்துள்ளார்.
மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 13 போட்டிகள் விளையாடி 576 ரன்கள் எடுத்து இந்த ஆண்டு அதிகம் ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவருடைய ஸ்டரைக் ரேட் 146.19 உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.