அதிக சிக்ஸர்…அதிக ரன்கள்…’மிரட்டல் சாதனை’ படைத்தது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை.!!

Published by
பால முருகன்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் :

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமாக விளையாடி வருகிறது என்றே கூறலாம்.  இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகள் விளையாடி 5 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக நேற்று கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது. அது என்ன சாதனைகள் என்பதை பற்றி பார்க்கலாம்.

அதிக சிக்ஸர்கள் விளாசிய சென்னை 

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி மொத்தமாக 18 சிக்ஸர்கள் விளாசியது. ஒரு இன்னிங்ஸில் சென்னை அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம் சென்னை அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்பு சென்னை அணி 1 போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்திருந்து. இது அணியின்  சாதனை இருந்தது. தற்போது அந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் குறிப்பாக, ரஹானே மற்றும் ஷிவம் துபே தலா 5 சிக்ஸர்கள் அடித்து வானவேடிக்கை காட்டினார்கள்.

அதிகபட்ச ரன்கள் 

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான  போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக விளையாடி 235 ரன்கள் குவித்து இருந்தது. இதன் மூலம் நடப்பாண்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது.

235 ரன்கள் என்பது சென்னை அணிக்கு 3-வது அதிகபட்ச ரன்கள் ஆகும். கடந்த 2010-ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னை அணி 246 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த படியாக கடந்த 2008-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 240 ரன்கள் எடுத்திருந்தது.

புள்ளி விவர பட்டியலில் முதலிடம்

நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 3-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்க்கு சென்றது. 10 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

இந்த 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…

28 minutes ago

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

13 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

14 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

14 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

15 hours ago