உலகக்கோப்பை நாயகனுக்கு மும்பையில் நினைவுச்சின்னம்; தொடங்கி வைத்த தோனி.!
மும்பை வான்கடே மைதானத்தில் அமையவுள்ள தோனியின் நினைவுச் சின்னத்திற்கான பணிகளை தோனி இன்று தொடங்கி வைத்தார்.
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றிக்கு வின்னிங் சிக்ஸ் அடித்த தோனிக்கு, நினைவுச்சின்னம் மும்பையின் வான்கடே மைதானத்தில் பந்து விழுந்த இடத்தில் அமைகிறது. இதற்கான பணிகளை இன்று எம்.எஸ்.தோனி திறந்து வைத்தார்.
இந்தியா 28 வருடங்களுக்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையை 2011இல் வென்று இந்திய ரசிகர்களின் வெற்றி தாகத்தை தனித்தது. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனி இறுதியாக அடித்த சிக்ஸ் யாராலும் மறக்க முடியாது.
மும்பை வான்கடே மைதானத்தில் அந்த பந்து விழுந்த இடத்தில் தோனிக்கு நினைவுச்சின்னம் அமைக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளுக்கு இன்று தோனி தொடங்கிவைத்தார். சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
One six for the man. One billion dreams for India.
Time to memoralise it!#WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/PC5O1JWHOh— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2023