மொயீன், டு பிளெசிஸ், ராயுடு அரைசதம் விளாசல்.., மும்பைக்கு 219 ரன்கள் இலக்கு ..!
சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27-வது போட்டியில் மும்பை – சென்னை அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை அணியில் தொடக்க ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே ருதுராஜ் 4 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயீன் அலி, டு பிளெசிஸிடன் கூட்டணி அமைத்தார். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவர்கள் இருவரும் கூட்டணியில் 108 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய வந்த மொயின் அலி 36 பந்தில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி விளாசி 58 ரன்கள் குவித்தார். இதையடுத்து, நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரை சதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய ரெய்னா 2 ரன்னில் வெளியேறினார். இதையெடுத்து களமிறங்கிய அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய அம்பதி ராயுடு 20 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் விளாசி 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். கடைசிவரை களத்தில் அம்பதி ராயுடு 72*, ரவீந்திர ஜடேஜா 22* ரன்களுடன் நின்றனர்.