INDvENG : களமிறங்கும் முகமது ஷமி! இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்தியாவின் சாத்தியமான பிளேயிங் லெவன் அணி பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், ஏற்கனவே கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அசத்தலாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதைப்போல, மற்றொரு வெற்றியை ருசிக்கும் நோக்கத்தோடு இந்திய வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
இந்த சூழலில், இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் பற்றிய சாத்தியமான பிளேயிங் லெவன் வீரர்கள் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த முகமது ஷமி இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் விளையாடவில்லை.
அவருடைய உடற்தகுதி முழுவதுமாக சரியான நிலையில் இல்லை என்பதால் உறுதியாக அவர் இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் : அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சகரவர்த்தி
இன்றயை போட்டியில் முகமது ஷமி விளையாடுவது உறுதி என்றால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் களமிறங்க வாய்ப்புள்ளது.