வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகல்!

Published by
பாலா கலியமூர்த்தி

வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதால் உம்ரான் மாலிக் சேர்ப்பு என பிசிசிஐ அறிவிப்பு.

இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி 11 30 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வங்கதேசம் சென்று அடைந்தது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. 

இந்த நிலையில், தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலிருந்து முகமது ஷமி விலகியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

அவர் தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார், மேலும் அவர் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது. இதானால் அகில இந்திய மூத்த தேர்வுக் குழு ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை நியமித்துள்ளது என கூறியுள்ளது.

வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பற்றுள்ளனர்.

இதனிடையே, டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பங்கேற்கும் முதல் தொடர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

59 minutes ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

2 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

5 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

6 hours ago