ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முகமது சிராஜ் ஐபிஎல் போட்டியை முடித்ததும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் அந்நாட்டு விதிமுறைப்படி தனிமையில் இருந்தார். அப்போது, சிராஜின் தந்தை நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் காலமானார். ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை.
கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என தெரிவித்திருந்தார். அதன்படி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு தாய் நாடு திரும்பிய முகமது சிராஜ், தந்தையின் கல்லறைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தற்போது சிராஜ் தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…