உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!
இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனிடையே, இப்போட்டி தொடங்கும் முன் இரு நாட்டு அணிகளின் தேசிய கீதம் போடப்பட்டது. இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார். அவரால் அழுகையை அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகி, சிராஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என பலரும் ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில், இந்த படத்தை சிலர் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் சிராஜ் முகமது. தேசிய கீதம் அவருக்கு முக்கியமானது என்று முன்னாள் வீரர் முகமது கயிப் தெரிவித்துள்ளார். சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும், 3 டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
I just want certain people to remember this picture. He is #SirajMohammed and this is what the national anthem means to him pic.twitter.com/eJi9Xeww8E
— Mohammad Kaif (@MohammadKaif) January 7, 2021
சிராஜின் தந்தை நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் காலமானார். அப்போது, ஆஸ்திரேலியாவில் இருந்த சிராஜ், தந்தையின் இறுதி சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை. கிரிக்கெட் விளையாடினால் தான் அப்பாவுக்கு பிடிக்கும். இந்த தொடரில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை வெற்றி பெற செய்து, அந்த வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என சிராஜ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
✊ #AUSvIND pic.twitter.com/4NK95mVYLN
— cricket.com.au (@cricketcomau) January 6, 2021