புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு சக வீரர்கள் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடிய இங்கிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று 5-ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் 2-வது இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியின் விக்கெட்டுக்கள் ஆரம்பத்தில் மளமளவென விழுந்தாலும் ரஹானே மற்றும் புஜாராவின் பொறுப்பான ஆட்டத்தினால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. இதன் பின் இருவரும் வெளியேற, மீண்டும் விக்கெட்டுகளை விட தொடங்கியது இந்தியா.
இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய இந்திய பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் பும்ரா தங்களது திறமையை பேட்டிங்கிலும் வெளிப்படுத்தி வந்தனர். இதில் சிறப்பாக விளையாடிய முகமது ஷமி அரை சத்தத்தை கடந்தார். மறுபுறம் ஜஸ்பிரித் பும்ரா தனது முழு ஈடுபாட்டையும் காண்பித்தார்.
இந்திய அணி 109.3 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழந்து, 298 ரன்களில் டிக்ளர் செய்தது. இறுதி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்கள் அடித்த களத்தில் இருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து சக வீரர்களும் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். தற்போது 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளது.
மேலும், 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்த போட்டி டிராவில் முடிவடைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…