#ICC : ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடம்பிடித்த முகமது நபி ..!

இலங்கைக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் 3 தொடர் கொண்ட ஒருநாள் போட்டிகளில், இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபி ஆட்டமனது மிக சிறப்பாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் முகமது நபி 136 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.  அதன் அடிப்படையில் தற்போது இவர் ஐசிசியின்  ஒருநாள் ( ODI ) ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முகமது நபி தற்போது நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

டி20யில் 500 விக்கெட்டை கடந்த பராசக்தி எக்ஸ்பிரஸ்..!

இதற்கு முன்னர் வங்காளதேச ஆல்-ரவுண்டான ஷகிப்-அல்-ஹசன் நம்பர் 1 இடத்தில் இருந்தார். அவர் ஆப்கானிஸ்தான் நட்சத்திர சூழல் பந்து வீச்சாளரான ரஷீத் கானிடம் இருந்து நம்பர் 1 இடத்தை தட்டி பறித்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி ஆல்-ரவுண்டர் நம்பர் 1 ஆக மாறினார்.

ஆல்-ரவுண்டான ஷகிப்-அல்-ஹசன்  நான்கு ஆண்டுகள் அதாவது 1739  நாட்கள் முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது   ஆப்கானிஸ்தான் ஆல்-ரவுண்டரான முகமது நபி நம்பர் 1  இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் வங்காளதேச வீரரான ஷகிப்-அல்-ஹசன் அதிக நாட்களாக ஆல் ரவுண்டர் நம்பர் 1 இடத்தில் இருந்திருப்பது ஒரு சாதனை ஆகும்.

இந்த சாதனையை முகமது நபி இன்று முறியடித்து நம்பர் 1 ஆல் ரவுண்டராக மாறி உள்ளார். மேலும், இவர் இந்த சாதனையை 39 வயதில் செய்துள்ளாதால் இலங்கை அணியின் முன்னாள் வீரரான திலகரத்ன டில்சான் சாதனையை முறியடித்துள்ளார்.

நம்பர் 1 ஆல்-ரவுண்டராக  திலகரத்ன டில்சான் தனது  (38 வருடம் 9 மாதம்) வயதில் இடம் பிடித்து இருந்தார். முகமது நபி தனது 39 வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார். இதன் மூலம் அதிக வயதில் நம்பர் 1 ஆல் ரவுண்டராக முகமது நபி திகழ்ந்து வருகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்