சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மோதுகிறது. ஏற்கனவே, இந்த சீசனில் கொல்கத்தா, ராஐஸ்தான், ஹைதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில் 4-வதாக பெங்களூர் அணி செல்லுமா அல்லது சென்னை அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.
இந்த நிலையில், வீராட் கோலி பார்ம் குறித்தும் சென்னை உடன் பெங்களூர் அணி விளையாடும் அந்த முக்கியமான போட்டி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “என்னை பொறுத்தவரையில் விராட் கோலி கட்டுப்படுத்த முடியாத ஒரு பார்மில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அவர் போட்டிகள் விளையாடும்போதும் எதுவும் அவரது கவனத்தை சிதறடிக்க முடியாது என்று கூறுவேன்.
ஏனென்றால், மைதானத்தில் இருந்து பெரிய சத்தம் வந்தாலும், யாராவது கத்தினாலும், அழுதாலும் அதெல்லாம் பற்றி அவர் கண்டுகொள்ளாமல் விளையாட்டை மட்டும் கவனம் செலுத்தி விளையாடி கொண்டு இருக்கிறார். அதைப்போல அணி எத்தனை ரன்கள் குவித்துள்ளது நாம் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளோம் என்பதை எல்லாம் பார்க்கவே மாட்டிக்கிறார். அவருடைய முழு கவனம் சரியாக விளையாடி நமது உழைப்பை கொடுக்கவேண்டும் என்று தான் யோசிக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, எந்தப் பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, விராட் கோலி இப்போது இருக்கும் பார்மை தடுக்க முடியாது என்று நான் கூறுவேன். அணியை வெற்றி பெற்றால் மட்டுமே திருப்தி அடைவேன் என்ற ஆவேசத்துடன் இப்போது விளையாடி கொண்டு இருக்கிறார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் ஆடும்போது விராட் கோலி சீக்கிரமே அவுட் ஆனார். ஆனால், இரண்டாவது முறை அது நடக்காது என்று நினைக்கிறன்” எனவும் முகமது கைஃப் கூறிள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…