எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Mohammad Kaif about Bhuvneshwar Kumar

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்  பாராட்டி பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு  201 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது.

கடைசி வரை போராடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமே ஹைதராபாத் அணி  வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் என்று கூறலாம். ஏனென்றால், இந்த போட்டியில் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்த போது கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த நிலையில், ரோவ்மேன் பவலை அவுட் செய்தார். எனவே, ஹைதராபாத் அணி வெற்றிக்கு முக்கிய காரணம் இவர் தான் என  ரசிகர்கள் அவருடைய பந்துவீச்சை பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்  ஸ்டார் ஸ்போட்ஸ் சேனலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது புவனேஷ்வர் குமார் பற்றி பாராட்டி பேசினார்.

இது குறித்து பேசிய முகமது கைஃப் ” ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்  புவனேஷ்வர் குமார்  பந்துவீச்சு ரொம்பவே அருமையாக இருந்தது. பட்லரை  அவர் ஆட்டமிழக்க செய்தது என்னை மிரள வைத்தது. புவனேஷ்வர் குமார் போட்ட ஸ்விங் பந்தில் பட்லரும், சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார்கள். போட்டியில் முக்கியமான விக்கெட்களை அவர் வீழ்த்தியது  ஹைதராபாத் அணி வெற்றிக்கு பக்க பலமாக அமைந்தது.

கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது, அவர் ஒரு செட் பேட்டரின் விக்கெட்டை எடுத்து கொடுத்தார். ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன், ஃபார்ம் பேட்டர்களை ஆட்டமிழக்க செய்தார். இதற்கு முன்னதாக நானே அவருடைய பந்துவீச்சை விமர்சித்து பேசி இருக்கிறேன். ஆனால், இப்போது அவருடைய பந்துவீச்சு அருமையாக இருக்கிறது. எனவே வெற்றி பெற்ற முழு புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்” எனவும் முகமது கைஃப் பாராட்டி பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்