ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 2022ஆம் ஆண்டிற்கான டி-20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்திருந்தது. பாகிஸ்தானின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் பாகிஸ்தான் தலைமைத் தேர்வாளர் முகமது வாசிமை கடுமையாக சாடியுள்ளார்.
செப்டம்பர் 15, வியாழன் அன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழு டி-20 உலகக் கோப்பை 2022க்கான அணியை அறிவித்தது. இந்த செய்திக்கு பின் முகமது ஆமிர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆசியக்கோப்பையில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற பாபர் அசாம் கேப்டனாகவும், ஆசியக்கோப்பையில் விளையாடிய பல வீரர்கள் தொடர்வதால் அணியில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. மூன்றாவது வீரராக பேட் செய்த ஃபகார் ஜமான் ரிசர்வ் குழுவில் சேர்க்கப்பட்டார்.
மேலும் முழங்கால் காயம் காரணமாக ஆசியக்கோப்பையில் விளையாடாமல் இருந்த ஷாஹீன் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டனர்.
இது குறித்து பேசும் பொது அமீர் தனது ட்விட்டர் பதிவில், “தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு” என்று கடுமையாக விமரிசித்துள்ளார். மேலும் அணித் தேர்வை பற்றி அவதூறாகப் பேசிய பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் பதிவையும் அமீர் பகிர்ந்துள்ளார்.
ஆசியக் கோப்பை 2022 இறுதிப்போட்டி தோல்வியைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையை வலுப்படுத்த பாகிஸ்தான் அணி ஷான் மசூத்தை மீண்டும் அணிக்குள் சேர்த்திருக்கிறது.
டி -20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் விவரம்:
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி மசூத் மற்றும் உஸ்மான் காதர்.
ரிசர்வ் வீரர்கள் : ஃபகார் ஜமான், முகமது ஹாரிஸ் மற்றும் ஷாநவாஸ் தஹானி.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…