வெற்றிக்கு காரணம் இவர்தான்: விராட் கோலி பெருமிதம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 213 ரன்கள் விளாசி அசத்தியுள்ளது.
அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள், மொயின் அலி 28 பந்துகளில் 66 இரண்டும் விளாசித் தள்ளினர். இதன் மூலம் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெங்களூரு அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். கிறிஸ் லின் ஒரு ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். சுனில் நரேன் 18 ரன்னிலும், ஷுப்மான் கில், ராபின் உத்தப்பா ஆகியோர் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.
அதனை அடுத்து ஆண்ட்ரு ரசல் அதிரடியாக ஆடி 25 பந்தில் 65 ரன் குவித்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா 46 பந்தில் 85 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில் கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர் அணி 10 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேசியதாவது
மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டோனிஸ் மற்றும் மொய்லி அலிக்கு ஓவர்கள் கொடுத்தது நல்ல முடிவாக நினைக்கிறேன். எங்களின் எதிர்பார்ப்பை மொய்ன் அலி மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் முழுமையாக நிறைவேற்றி விட்டனர், நாங்கள் 200+ ரன்கள் எடுப்போம் என்று நாங்களே நினைக்கவில்லை, 170 முதல் 175 ரன்கள் எடுத்தாலே போதும் என்று தான் நினைத்தோம். மொய்ன் அலி போட்டியை தலைகீழாக மாற்றிவிட்டார்” என்றார்.