டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்றார் மொயீன் அலி!
டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பினார் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெற்றார் இங்கிலாந்து மொயீன் அலி. இதனால், முதல் 2 ஆஷஸ் போட்டிகளுக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி, தனது முடிவை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்டு, டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பினார் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி. இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து தொடருக்குப் பிறகு செப்டம்பர் 2021-இல் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதிலிருந்து மொயீன் முதல்தரப் போட்டியில் விளையாடவில்லை. அவர் ஓய்வு பெற்றதிலிருந்து, இங்கிலாந்துடன் டி20 உலகக் கோப்பையையும், சென்னை சூப்பர் கிங்ஸுடன் 2 ஐபிஎல் பட்டங்களையும் வென்றுள்ளார்.
View this post on Instagram