உலகக்கோப்பையுடன் மோடி …! வியப்பூட்டும் நிகழ்வுகள் .. வைரலாகும் புகைப்படங்கள்!
டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு 2024 ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றிய இந்திய அணி இன்று காலை டெல்லியில் வந்து தரை இறங்கினார்கள். இன்று காலை முதல் இந்திய ரசிகர்கள் நம் இந்திய வீரர்களுக்கு கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத ஒரு தருணமாகவே அமைந்துள்ளது என்று கூறலாம்.
அதன்பிறகு 11 மணி போல இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு மோடி, வெற்றி பெற்ற இந்திய வீரர்களை அவர் வாழ்த்தி, வரவேற்று காலை விருந்தை கொடுத்தார். அதன் பிறகு, இந்திய அணி வீரர்களுடன் சேர்ந்து அமர்ந்து கலகலப்பாக பேசி விட்டு, பின் அவர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியும் வருகிறது. அது வீடியோவில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் ட்ராவிடும் இணைந்து அவரது கையில் கோப்பையை கொடுப்பார்கள். அப்போது மோடி அதை தனியாக வாங்கிக்கொள்ள மாட்டார்.
A memorable occasion as #TeamIndia got the opportunity to meet the Honourable Prime Minister of India, Shri Narendra Modiji in Delhi 🙌@narendramodi | @JayShah pic.twitter.com/eqJ7iv9yVw
— BCCI (@BCCI) July 4, 2024
அவர் கோப்பையை ஏந்திய இருவரின் கையின் அடியில், அவரது கையை வைத்து புகைப்படம் எடுத்துகொள்ளவார். மேலும், இந்தியா அணியுடன் அமர்ந்து பேசுவார். கடந்த நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டி வரை வந்து ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியை தழுவி வெளியேறியது.
அப்போதும் நரேந்திர மோடி இந்தியா அணியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அந்த வீடியோவும் அப்போது வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து 5 மணி அளவில் வெற்றி பெற்ற இந்திய அணி, மும்பையில் உள்ள விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் செல்லவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.