ஒரு முனை “Reliance End” மறுமுனை “Adani End”.. களைகட்டும் நரேந்திர மோடி மைதானம்!

Default Image

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் இன்று  பகல் – இரவு போட்டியாக தொடங்கியது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த டெஸ்ட் தொடரை காண 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்துள்ளனர். தற்பொழுது இந்த மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஒரு முனை ரிலையன்ஸ் (Reliance End) மற்றோரு முனை அதானி (Adani End) என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்