MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்துள்ளனர்.

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு விளையாடினார். ஒரு பக்கம் இவர் அதிரடியாக விளையாட மற்றோரு பக்கம் விராட் கோலி அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். 8.6 ஓவரில் படிக்கல் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர் ஆட்டமிழந்தாலும் கூட விராட் கோலி அரைசதம் விளாசி அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். படிக்கல்லுக்கு பிறகு வந்த பெங்களூர் அணியின் கேப்டன் படிதார் நீங்க கொஞ்சம் நிதானமா இருங்க நான் பாத்துக்கிறேன் என அதிரடி காட்டினார். மறுமுனையில் இருந்த விராட் கோலியும் சிங்கிள் எடுத்து கொடுத்து படிதாருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க அதிரடி காட்டினார்.
பின் நிதானமாக விளையாடி கொண்டிருந்த விராட் கோலி அதிரடி ஆட்டம் காட்ட நினைத்து 67 ரன்களில் அட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த லியாம் லிவிங்ஸ்டன் வந்த வேகத்தில் சொற்ப ரன்களில் (0) ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். யார் ஆட்டமிழந்தாலும் நான் அணிக்காக போராடுவேன் என படிதார் விளையாடி கொண்டு இருந்தார். மற்றொரு பக்கம் ஜிதேஷ் ஷர்மாவும் அதிரடியுடன் விளையாடி கொண்டு இருந்தார்.
16 ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவை குறி வைத்த அரை சதம் விளாசிய படிதார் இரண்டு சிக்ஸர் 1 பவுண்டரி என 15 ரன்கள் விளாசி அசத்தினார். அதன்பிறகு 18-வது ஓவரை போல்ட் வீச வந்த நிலையில் ஜிதேஷ் சர்மா இரண்டு சிக்ஸர் விளாசினார். அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த படிதார் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் எவ்வளவு ரன்கள் வரப்போகிறது என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.
பெங்களூர் அணி ரன்கள் எடுத்துள்ள நிலையில், அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது. மேலும், மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஹார்திக் பாண்ட்யா, டிரென்ட் போல்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்கள்.