MIvsKKR : சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர்…மும்பை அணிக்கு இதுவே இலக்கு.!
ஐபிஎல் தொடரின் இன்றைய MIvsKKR போட்டியில், முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ரன்கள் குவிப்பு.
MIvsKKR
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் – கொல்கத்தா
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின், தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (0 ரன்கள்) ஆட்டமிழந்து வந்த வேகத்தில் வெளியேறினார். அவரை தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
???? ????
Take a bow, @venkateshiyer ????
Follow the match ▶️ https://t.co/CcXVDhfzmi#TATAIPL | #MIvKKR | @KKRiders pic.twitter.com/sYx4kSnRdT
— IndianPremierLeague (@IPL) April 16, 2023
கடைசியாக சதம் அடித்துவிட்டு 17-ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் வெளியே போன வேகத்திலே 18 ஓவரில் ரிங்கு சிங்குவும் (18) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் கடைசி சில ஓவர்களில் சில பவுண்டரிகள் அடித்து (20 ரன்கள்) எடுத்தார்.
மும்பை அணிக்கு 186 இலக்கு
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்துள்ளது. எனவே, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
அதிகபட்சமாக
அதிகபட்சமாக கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் (100) ரன்கள், ரிங்கு சிங் (18) ரன்கள் குவித்துள்ளனர். அதைப்போல மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹிருத்திக் ஷோக்கீன்2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும்