மகளிர் ஐபிஎல் தொடரின் 12-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, மும்பை அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.
163 ரன்கள் என்ற இலக்கில் குஜராத் அணியின் சோபியா டங்க்லி மற்றும் சப்பினேனி மேகனா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சோபியா டங்க்லி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். சப்பினேனி மேகனா, ஹர்லீன் தியோல் ஆட்டமிழந்த நிலையில் அடுத்தடுத்து களமிறங்கிய அனைவரும் ஆட்டமிழந்தனர். இந்த பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் சுஷ்மா வர்மா, மான்சி ஜோஷி களத்தில் இறுதிவரை நின்றனர். இருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
20 ஓவர்கள் முடிந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை அடித்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை, 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 22 ரன்களும், சினே ராணா 20 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்பிரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.