#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி…?

இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது.
இன்று ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை மும்பை அணி 12 போட்டிகள் விளையாடி 8 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 8 போட்டிகள் வெற்றியடைந்து பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 25 போட்டிகள் மோதியதில் 13முறை மும்பை அணியும், 12 முறை டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025