#WPLFinal : டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி..! கோப்பையை தட்டி தூக்கியது மும்பை அணி..!
மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது.
132 ரன்கள் என்ற இலக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆட்டமிழந்த நிலையில், அதன் பின் களமிறங்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் அணிக்கு ரன்களை குவித்தனர். நாட் ஸ்கிவர்-பிரண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் மெலி கெர் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
19.3 ஓவர்களில் 134 ரன்களை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றது. மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் வென்றதன் மூலம் மும்பை அணி கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 60* ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.