MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!
மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் இதுவரை 33 போட்டிகள் நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் மும்பை 19 முறையும் பெங்களூர் அணி 14 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் புள்ளி விவர பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது. எனவே, வெற்றிபெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது.
டாஸ்
போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே, முதலில் பெங்களூர் அணி தான் பேட்டிங் செய்யவுள்ளது.
வீரர்கள்
மும்பை : வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன்(w), நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(c), மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, விக்னேஷ் புதூர்
பெங்களூர் : பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(கேட்ச்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
அணிக்கு திரும்பிய பும்ரா & ரோஹித்
காயம் காரணமாக முதல் 4 போட்டிகள் விளையாடாமல் இருந்த பும்ரா இன்று பெங்களூர் அணிக்கு எதிரான இந்த போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளது போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதைப்போல, கடந்த 3 போட்டிகளாக சொதப்பிய ரோஹித் சர்மா கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். தற்போது அவரும் அணிக்கு திரும்பியுள்ளார். எனவே, இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பார் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.