#MIvPBKS: முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? .. 136 ரன்கள் அடித்தால் வெற்றி!
மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் 2வது போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் 42வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்களான கேஎல் ராகுல், மன்தீப் சிங் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் வெளியேறினார். இதன்பின் மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டை இழந்தனர்.
இந்த சமயத்தில் ஐடன் மார்க்ரம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சற்று நிதானமாக விளையாடி வந்த நிலையில், மார்க்ரம் 42 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து தீபக் ஹூடாவும் 28 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது.
136 ரன்கள் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் தங்களது முதல் வெற்றியை பதிவும் செய்யும். மும்பை பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.