MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிகிறது. இந்தப் போட்டியில், லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. அதன்படி, மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 54 ரன்களும், ரியான் ரிக்கல்டன் 58 ரன்களும் அரைசதம் அடித்து லக்னோ அணியை அதிர வைத்தனர்.
மும்பை அணியின் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை, ஆம், மூன்றாவது ஓவரிலேயே, மும்பை இந்தியன்ஸ் அணி முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. அவரை மயங்க் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். ரோஹித் வெறும் 5 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்கள் எடுத்தார்.
ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, ரியான் ரிகெல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் பார்ட்னர் ஷிப் இரண்டாவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்ந்தது. இந்த கூட்டணியின் போது, ரிக்கல்டன் 25 பந்துகளில் தனது அரைசதத்தை அடித்தார். இருப்பினும் லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி, ரிக்கல்டனை ஆட்டமிழக்கச் செய்தார்.
ரியான் ரிக்கல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 58 ரன்கள் எடுத்தார். ரிக்கல்டன் அவுட் ஆன பிறகு, சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 54 ரன்கள் எடுத்து தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ஆனால் ஆவேஷ் கானின் ஓவரில், கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர், திலக் வர்மாவை (6) சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் பெவிலினுக்கு திருப்பி அனுப்பினார். அதை தொடர்ந்து, திலக் ஆட்டமிழந்த நேரத்தில், மும்பை அணியின் ஸ்கோர் 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளுக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது.
எப்படியோ 18வது ஓவரில் மும்பை அணியின் ஸ்கோர் 180-ஐ தாண்டியது. இறுதியில், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து, லக்னோ அணிக்கு 216 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இப்பொது, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி லக்னோ அணி களமிறங்க போகிறது.