இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனியிடத்தை பிடித்தவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்தாண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.என்றாலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை கிரிகெட் போட்டிக்களுக்காக தன்னை தயாராக்கி வருகிறார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் பட்டியலில் கோலி,ரோகித் சர்மாவை முந்திக்கொண்டு முதலிடத்தில் இருந்து வருகிறார்.நம்பர்1 டி20 வீரர்,அதிரடி ஆட்டக்காரர்,களத்தை புரிந்து கொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என்று இவரை பற்றி கூறிக்கொண்டே செல்லலாம்.தற்போது கிரிக்கெட் உபகரண கவசங்களோடு நம் நாட்டின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலி கையில் மட்டையை பிடித்து கொண்டு மிடுக்காக கிரிக்கெட் விளையாடும் வீடியோவானது சமூகவலைதலங்களில் வெளியாகியது.இந்நிலையில் இந்த வீடியோவானது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் அதனை மகளிர் தினத்தை முன்னிட்டு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிதாலி பதிவிட்டு உள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…