“இந்தியா VS சவுத்ஆப்பிரிக்கா: சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்து மிதாலி ராஜ்புதிய சாதனை!…
மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மிதாலி ராஜ் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்,மேலும் டெஸ்ட் மற்றும் ODI போட்டிகளிலும் கேப்டனாக உள்ளார்.இவர் ஒரு வலதுகை பேட்ஸ்மேன். 1999ல் மிதாலி தனது 16 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இவர் ODI போட்டிகளில் 6974 ரன்கள் எடுத்துள்ளார், T20 போட்டிகளில் மிதாலி 2,364 ரன்கள் எடுத்துள்ளார்.மிதாலி ராஜ் “இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் லேடி சச்சின்” என்ற பெயரில் செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்தியா vs சவுத்ஆப்பிரிக்கா பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான 3வது ஒருநாள்(ODI) கிரிக்கெட்போட்டி லக்னோவில் அட்டல் பிஹாரி வாஜ்பாய் எகனா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் மிதாலிராஜ் 50 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்ததனால் அவர் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பெண்வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ்தான் 10273 ரன்களில் இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை.சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனைபடைத்த மிதாலி ராஜை , “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)” வாழ்த்தியுள்ளது.