அதிக விக்கெட்டை பறித்து சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்!
கடந்த 11-ம் தேதி நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதியது . டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர். பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை பறித்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 27 விக்கெட்டை சாதனை படைத்து உள்ளார்.
இதன் ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 26 விக்கெட்டை பறித்து முதலிடத்தில் இருந்தார். அவரது சாதனையை மிட்செல் ஸ்டார்க் முறியடித்து முதலிடத்தில் உள்ளார்.