சாண்ட்னர் சாதாரண ஆள் இல்லை..அவர்கிட்ட தோனி அனுபவம் இருக்கு! புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் இருக்கிறார் என்பதால் அது அவர்களுக்கு கூடுதல் பலம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 -ஆம் ஆண்டின் இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக இதைப்போலவே கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது.
அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது என்பது இன்று வரை மறக்க முடியாத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. எனவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.
இந்த அளவுக்கு நியூசிலாந்து அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு மிட்செல் சாண்ட்னர் கொண்டுவருவாரா என்கிற கேள்வி ஆரம்ப காலத்தில் எழுந்த நிலையில், அது அனைத்திற்கும் தனது கேப்டன்சி மூலம் அவர் பதிலடி கொடுத்துள்ளார். எனவே, அவருடைய கேப்டன்சி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பெருமையாக பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசீம் ஜாஃபர் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியீட்டு பேசியிருக்கிறார். அதில் பேசும்போது ” மிட்செல் சாண்ட்னர் சாதாரண ஆள் இல்லை. ஏனென்றால், அவர் சமீபகாலமாக கேப்டனாக விளையாடியது சில போட்டிகளில் தான் ஆனால், அவர் கற்றுக்கொண்ட அனுபவம் என்பது அதிகம் என்று சொல்வேன்.
ஏனென்றால், அனுபவம் வாய்ந்த கேப்டன் தோனியுடைய கேப்டன்ஷிப் கீழ் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக சில போட்டிகளில் விளையாடி இருக்கிறார். எனவே, தோனியிடம் இருந்து அவர் பல விஷயங்களை கற்றிருக்கலாம். தோனியை போல ஒருவருடன் விளையாடும்போது அவரை நெருக்கமாக கவனித்தாலும், அப்படி கவனித்துக்கொள்பவருக்கு கற்றுக்கொள்ளும் திறன் இருந்தால் நிச்சயமயாக அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கலாம். எனவே, அப்படி மிட்செல் சாண்ட்னர் சில முக்கிய விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கலாம் என நினைக்கிறேன்.
அப்படி அவர் தோனியிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை தாண்டி அவருடைய அணியில் இன்னும் அனுபவம் வாய்ந்த கேன் வில்லியம்சன் போன்ற முக்கியமான வீரர் இருக்கிறார். அவர் சிறந்த வீரர் என்பதை தாண்டி அவரும் ஒரு சிறப்பான கேப்டன் தான். இதுவே அவர்களுடைய அணிக்கு ஒரு பெரிய பலமாக இருக்கும். இரண்டு அணிகளுமே பலமாக இருப்பதால் போட்டி ஒரு பக்கம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. நிச்சயமாக சவாலான போட்டியாக இருக்கும்” எனவும் வாசீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025