புதிய கேப்டனாக மிட்செல் மார்ஷ் !! டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவுப்பு !

Cricket Australia : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், தற்போது டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது வருகிற மே-26 ம் தேதி அன்று நிறைவடைய உள்ளது. அதை தொடர்ந்து உடனடியாக இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகள் அவர்களது அணிகளை தற்போது வெளியிட்டு கொண்டே வருகிறது.
அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் சமீபத்தில் அவர்களது டி20 அணிகளை அறிவித்தனர். மேலும், நேற்றைய தினத்தில் பிசிசிஐயும் தங்களது டி20 இந்திய அணியை அறிவித்தனர். தற்போது அந்த வரிசையில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயலாற்றி அந்த உலகக்கோப்பையையும் வென்று இருந்தார். ஆனால், இந்த டி20 உலகக்கோப்பையில் தற்போது கேப்டனாக மிட்செல் மார்ஷ் செயலாற்ற உள்ளார். இது போன்ற மாற்றங்கள் செய்வதாலும், இது போன்ற அணி தேர்வை செய்வதால் தான் ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் போட்டியில் சிறப்பான அணியாக வளம் வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் 15 வீரர்கள்
மிட்ச் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.