பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜம்பவனுக்கு நேர்ந்த சோகம் … ஜிம்மில் ஏற்பட்ட விபரீதம்….
முன்னாள் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஜான்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், 2018 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். இவர் உடற்பயிற்சி கூடத்தில் சின்-அப் பாரில் பயிற்சி செய்து கொண்டிருக்கையில், எதிர்பாராத விதமாக அவர் தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 16 தையல் போடப்பட்டு இருக்கிறது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயம் ஏற்பட்டது முதல் தையல் போட்டது வரையிலான தனது புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். மேலும், “உங்களுக்கு ரத்தம், வெட்டு காயத்தை பார்த்தால் பிடிக்காது என்று இதை பார்க்காதீர்கள். எனக்கு நானே செய்து கொண்ட சிறந்த விஷயம் இது இல்லை. என்றாலும் தற்போது நான் நலமாக உள்ளேன்” என்றும் ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.
இடதுகை பந்துவீச்சாளரான மிட்செல் ஜான்சன், ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக அடிப்படை விலையான ரூ.2 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்களும், 153 ஒருநாள் ஆட்டங்களில் 239 விக்கெட்களையும் கைப்பற்றியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.