ஐபிஎல் 2023 தொடர் இறுதிப்போட்டியில் நேற்று சென்னை அணி குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில், சென்னை அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் “5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக சென்னை அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எம்.எஸ் தோனியின் சிறந்த கேப்டன்சி மற்றும் ஜடேஜாவின் அற்புதமான ஃபினிஷிங் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் மீண்டும் ஒருமுறை சிஎஸ்கே தனது காவிய செயல்திறனைப் பதிவு செய்தது” என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த் குஜராத் அணி 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. இதன்பின் சென்னை அணி களமிறங்கியதும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்படும் பொழுது சிக்ஸர் மற்றும் ஃபோர் அடித்து சென்னையை ஜடேஜா வெற்றி பெறச்செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…