மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்! 

நாளை டெல்லிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் விளையாடவில்லை என்றால் தோனி தலைமை ஏற்க வாய்ப்புள்ளது என CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

MS Dhoni - Ruturaj Gaikwad

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் ஆடுகையில் துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து கெய்க்வாட் முழங்கையில் பட்டது. இதில் காயமடைந்த ருதுராஜ் அப்போது லேசாக சிகிச்சை பெற்று தொடர்ந்து விளையாடினார்.

ருதுராஜ் காயம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு முழங்கையில் அடிபட்டது. அதன் பிறகு தேறி தற்போது பேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். நாளை விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், நாளை டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதில் யார் அணியை தலைமை தாங்குவார் என கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஹசி, அதான் ஸ்டம்பிற்கு பின்னால் ஒரு இளம் வீரர் இருக்கிறாரா அவர் கேப்டன்சி செய்ய வாய்ப்புள்ளது எனக் கூறினார். அப்படியென்றால் அது தோனி தான் என பலரும் கேள்வி எழுப்ப, அது பற்றி நான் உறுதியாக கூற முடியாது. அது பயிற்சியாளரும் அணி நிர்வாகமும் எடுக்கும் முடிவு என கூறிவிட்டு சென்றார்.

நாளை மதியம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது ருதுராஜ் விளையாடினால் அவர் தலைமை ஏற்பார். இல்லையென்றால் தோனி தலைமையில் CSK அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்